தொலைபேசி குறுஞ்செய்தி மோசடிகள் மூலம் தனிநபர்களிடம் $34,000க்கு மேல் மோசடி செய்த மெல்பன் குடியிருப்பாளர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
27 வயதுடைய சந்தேக நபர் விக்டோரியா மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 05 தடவைகள் இந்த பண மோசடிகளை அவர் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த பிப்ரவரியில் முடிவடைந்த 12 மாதங்களில் பல்வேறு மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட 44 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக நுகர்வோர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் பெரும்பாலானவை குறுஞ்செய்தி மோசடிகள் மற்றும் 27,000 பேர் கிட்டத்தட்ட 68 லட்சம் டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.