News விண்வெளியில் இருந்து பூமிக்கு கொண்டுவரப்படும் தக்காளி

விண்வெளியில் இருந்து பூமிக்கு கொண்டுவரப்படும் தக்காளி

-

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்த கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த சூழலில் விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து விஞ்ஞானிகள் அசத்தி இருந்தனர்.

நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது விண்வெளியில் தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் பெரும்பாலானோர் தக்காளியை தங்கள் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். சமைக்காமல் பச்சையாகவும், சமைத்தும் பல வகையில் நம் உணவில் தக்காளி இடம்பெற்றுள்ளது.

விண்வெளியில் ஆராய்ச்சி ரீதியாக தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விஞ்ஞானிகள் தக்காளியை விடுவித்துள்ளனர்.

இது குட்டை ரக தக்காளி என நாசா தெரிவித்துள்ளது. சுமார் 100 நாட்களுக்கு மேல் தக்காளி அங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. முறையே 90, 97 மற்றும் 104-வது நாட்களில் தக்காளி அறுவடை செய்யப்படுள்ளது.

அதை பதப்படுத்தி அதன் ஊட்டச்சத்து சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணத்தின் போது ப்ரெஷ் உணவு பெற உதவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு என நாசா தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...