Newsநடுவானில் பற்றி எரிந்த பயணிகள் விமானம்

நடுவானில் பற்றி எரிந்த பயணிகள் விமானம்

-

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (23) காலை புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் இயந்திரத்தில் இருந்து பயங்கரமாக தீ பற்றியது. நடுவானில் விமானத்தின் இயந்திரம் மீது பறவை மோதியதால் இயந்திரத்தில் தீ பற்றியுள்ளது.

இயந்திரத்தில் தீ பற்றியதால் விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். தீ பற்றியது குறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஒஹியோ விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறக்கினார்.

பின்னர் உடனடியாக இயந்திரத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் பினிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுவானில் விமான இயந்திரத்தில் தீ பற்றி எரிந்த நிகழ்வை தரையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...