அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய வரவு செலவுத் திட்டத்தில் அவுஸ்திரேலியர்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதில் பாரிய நிவாரணம் வழங்குவது தொடர்பான பிரேரணையை உள்ளடக்குவதற்கு தொழிற்கட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு சொட்டு மருந்தின் விலையில் பெறக்கூடிய ஒரு மாத மருந்துத் தொகைக்குப் பதிலாக, 02 மாதங்களுக்கான மருந்தை வாங்க முடியும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் இந்த திருத்தத்தின் மூலம் சுமார் 06 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் நிம்மதியடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 04 ஆண்டுகளில் அவுஸ்திரேலியர்களுக்கு 1.6 பில்லியன் டொலர் நிவாரணம் வழங்குவதே இந்த திருத்தத்தின் அடிப்படை எதிர்பார்ப்பாகும்.
சிறுநீரகக் கோளாறுகள் – நீரிழிவு நோய் – இதய நோய்கள் போன்ற மருத்துவ நிலைமைகளுக்குத் தேவையான சுமார் 320 வகையான மருந்துகளை வாங்கும் போது இந்தச் சலுகை பெறப்பட உள்ளது.
இருப்பினும், பல மருந்தக உரிமையாளர்கள் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பல வகையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்த பிரேரணையின் ஊடாக இது மேலும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.