NSW தமிழ் சமூகம் 2023 ஆம் ஆண்டுக்கான ANZAC தினத்தை தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த ஆண்டும் கருத்துரை வழங்கியதுடன், ஏராளமான சமூக உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர், மாண்புமிகு மிஷல் ரோலண்ட் எம்.பி., மத்திய மற்றும் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கம்பர்லேண்ட் மேயர் மற்றும் பல்வேறு நகர சபைகளின் கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Parramatta ஃபெடரல் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்ட்ரூ சார்ல்டன் எம்.பி சிறப்புரை ஆற்றினார், மேலும் பல அஞ்சலி உரைகள் மற்றும் நிகழ்வுகள் நினைவேந்தலின் போது இடம்பெற்றன.





