Breaking Newsபூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல் - நாசா தகவல்

பூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல் – நாசா தகவல்

-

பூமியை நேற்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், இன்று 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாகவுள்ள விண்கற்கள் மட்டும் பேசும் பொருளாகவுள்ளது.

அந்தவகையில் நேற்று பூமியை நான்கு விண்கற்கள் கடக்க உள்ளதாக நாசா கூறியுள்ளது. அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்களும் 90 அடி அளவு கொண்டன. மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 & 2023 HH3 சிறிய அளவை கொண்டன.

இவற்றை தவிர்த்து இன்று ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளது.

சுமார் 1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் மணிக்கு 62,723 கிலோமீற்றர் வேகத்தில் கடக்கவுள்ளது.

இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும், எனினும் விண்கற்களின் அசைவுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...