வரும் செவ்வாய்கிழமை பட்ஜெட்டில் பியர் மீது விதிக்கப்படும் வரியை குறைக்குமாறு பல ஆஸ்திரேலிய மது உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் வரி உயர்த்தப்பட்டால், சிறிய அளவிலான மதுக்கடைகள் தங்கள் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பியர் மீதான வரியை 3.7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அடுத்த வார பட்ஜெட்டில் மீண்டும் வரி அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளுக்கு மட்டுமே பட்ஜெட் நிவாரணம் வழங்க முடியும் என்று மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார்.
உணவு-மருந்து மற்றும் எரிசக்தி கட்டணங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த 4 வருடங்களுக்கு அரசாங்கம் 112 பில்லியன் டொலர் கடனைத் தீர்க்கப் போவதால் வரி வருமானம் உதவும் என ஜிம் சால்மர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.





