இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டொக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் வெளியீட்டுத் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஒகஸ்ட் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் ஒகஸ்ட் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி மாஸாக காரில் இருந்து இறங்குவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நன்றி தமிழன்





