நியூ சவுத் வேல்ஸ் வரலாற்றில் சூதாட்டம் மற்றும் பந்தய ஊக்குவிப்பாளர் ஒருவருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை வெளியிட்ட அமைப்பு ஒன்றிற்கு 210,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் நியூ சவுத் வேல்ஸில் பந்தய விதிமுறைகளை மீறியதாக 14 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
மெல்போர்ன் கிண்ணப் போட்டிகள் உட்பட பல போட்டிகள் தொடர்பில் இந்த அமைப்பு சட்டவிரோத விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





