Newsபைக்கில் 300 கி.மீ. வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா உயிரிழப்பு

பைக்கில் 300 கி.மீ. வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா உயிரிழப்பு

-

இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்ட்யா சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்ட்யா சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை ‘புரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சனலில் பதிவிட்டுவந்தார். இவரது யூடியூப் சானல் 12 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது.

இந்நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆயிரம் சிசி திறன்கொண்ட கவாசாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் என்ற பைக்கின் முழு வேகத்தையும் சோதித்து பார்க்க முடிவு செய்தார் அகஸ்ட்யா . இதற்காக கடந்த புதன்கிழமை, யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவில் இருந்து டெல்லியை நோக்கி பயணித்தார் அகஸ்ட்யா .

இதனை வீடியோவாக பதிவுசெய்து தனது சேனலில் பதிவிடுவதற்கான பணிகளை மேற்கொண்டபடி பைக்கை இயக்கினார். செல்லும் வழியில் பைக்கில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளிடம் பேசியவாறும், அவர்களை தன்னைவிட அதிக வேகத்தில் செல்லுமாறும் கூறியபடி சென்றார். பின்னர் அவர்களை விட மின்னல் வேகத்தில் பறப்பதுமாக ரன்னிங் கமென்ட்ரி கூறியவாறே பைக்கை ஒட்டிச்சென்றார்.

வெறும் 3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தையும், அடுத்த 10 வினாடிக்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டும் திறன் கொண்ட இந்த பைக்கில் 47-வது மைல் பொயின்ட் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த அகஸ்ட்யா , தற்போது 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட உள்ளதாக தெரிவித்தார். அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதினார்.

மோதிய வேகத்தில் பைக் தூக்கிவீசப்பட்டது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பல துண்டுகளாக உடைந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அகஸ்ட்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யூடியூபர் ஓட்டிக்கொண்டிருந்த கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக் மணிக்கு சுமார் 300 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது..மேலும் 200 பிஎஸ் ஆற்றலையும் 115 எம்எம் முறுக்குவிசையையும் வெளிப்படுத்தக்கூடிய இன்லைன் நான்கு எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 207 கிலோ எடை கொண்டது. சாதாரணமான 125முதல் 150 சிசி திறன் கொண்ட பைக்குகளைவிட சுமார் 15 மடங்கு திறன் கொண்டது கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர். மேலும் இந்தியாவில் வழக்கமான செடானை விட இரண்டு மடங்கு திறன் கொண்டது.

இந்த பைக் அதிவேகத்தில் செல்லக்கூடியது. இதில் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் மற்றும் 0-200 கி.மீ. வேகத்தை வெறும் 10 வினாடிகளில் துரிதப்படுத்த முடியும்.இந்த பைக்கை பொது சாலைகளில் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் கையாள்வது கூட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.

கடைசி வீடியோவில்…:

அகஸ்தய் தனது சானலில் பதிவேற்றிய கடைசி வீடியோவில், நான் டெல்லிக்குச் செல்கிறேன், அங்கு பைக்கில் எவ்வளவு வேகமாக செல்ல முடியும் என்பதை சரிபார்க்கப் போகிறேன். இதற்காக பைக்கை 300 கிலோ மீட்டர் வேகத்தில் எடுத்துச் செல்கிறேன், அதைத் தாண்டிச் செல்ல முடியுமா என்று பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...