Newsபயன்படுத்தப்படாத 'கூகுள்' கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

பயன்படுத்தப்படாத ‘கூகுள்’ கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

-

இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க ‘கூகுள்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து, இணையதளவாசிகள் பல விதங்களில் பயனடைந்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்புவது, புகைப்படங்களை சேமிப்பது, திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வது, யு டியூப் பயன்படுத்துவது, ஆவணங்களை சேமிப்பது என கூகுளின் அத்தனை அம்சங்களும் அனைவரையும் கவர்ந்துள்ளன.

கூகுள் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவை பயன்படுத்தப்படாமல் உள்ள சூழலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகளாக ஒரு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும். அந்த கணக்கு யாரோ ஒருவரால் தவறாக பயன்படுத்தப்படும். ஆகையால், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அவ்வாறு நீக்கப்பட்டால், மின்னஞ்சல் முகவரி, ஜி – மெயில் செய்திகள், கலண்டர் நிகழ்வுகள், கூகுள் டிரைவ், கூகுள் புகைப்படங்கள், யு டியூப், டெக்ஸ் எனப்படும் பணியிட கோப்புகள் போன்றவற்றை கணக்காளர்கள் பயன்படுத்த முடியாது. தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். நிறுவனங்கள், பாடசலைகள் அல்லது வணிகங்களுக்கான கணக்குகள் இதனால் பாதிக்கப்படாது.

ஒரு கணக்கை நீக்குவதற்கு முன், அதன் மின்னஞ்சல் முகவரி மற்றும் மீட்பு மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டிற்கும் அது தொடர்பான அறிவிப்புகள் சில மாதங்களுக்கு அனுப்பப்படும். அவ்வாறு எச்சரித்தும், கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், அதை நீக்குவதற்கான நடவடிக்கை துவங்கும். கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமென்றால், கூகுளின் ஏதாவது ஒரு சேவையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்பாட்டில் இருத்தல் அவசியம். இவ்வாறு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...