Newsபயன்படுத்தப்படாத 'கூகுள்' கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

பயன்படுத்தப்படாத ‘கூகுள்’ கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

-

இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க ‘கூகுள்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து, இணையதளவாசிகள் பல விதங்களில் பயனடைந்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்புவது, புகைப்படங்களை சேமிப்பது, திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வது, யு டியூப் பயன்படுத்துவது, ஆவணங்களை சேமிப்பது என கூகுளின் அத்தனை அம்சங்களும் அனைவரையும் கவர்ந்துள்ளன.

கூகுள் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவை பயன்படுத்தப்படாமல் உள்ள சூழலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகளாக ஒரு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும். அந்த கணக்கு யாரோ ஒருவரால் தவறாக பயன்படுத்தப்படும். ஆகையால், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அவ்வாறு நீக்கப்பட்டால், மின்னஞ்சல் முகவரி, ஜி – மெயில் செய்திகள், கலண்டர் நிகழ்வுகள், கூகுள் டிரைவ், கூகுள் புகைப்படங்கள், யு டியூப், டெக்ஸ் எனப்படும் பணியிட கோப்புகள் போன்றவற்றை கணக்காளர்கள் பயன்படுத்த முடியாது. தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். நிறுவனங்கள், பாடசலைகள் அல்லது வணிகங்களுக்கான கணக்குகள் இதனால் பாதிக்கப்படாது.

ஒரு கணக்கை நீக்குவதற்கு முன், அதன் மின்னஞ்சல் முகவரி மற்றும் மீட்பு மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டிற்கும் அது தொடர்பான அறிவிப்புகள் சில மாதங்களுக்கு அனுப்பப்படும். அவ்வாறு எச்சரித்தும், கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், அதை நீக்குவதற்கான நடவடிக்கை துவங்கும். கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமென்றால், கூகுளின் ஏதாவது ஒரு சேவையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்பாட்டில் இருத்தல் அவசியம். இவ்வாறு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இளைஞர்கள் புகைபிடிப்பதை தடை செய்யும் புதிய சட்டம் அறிமுகம்

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைபிடிப்பதைத் தடைசெய்யும் மசோதாவை இங்கிலாந்து சட்டமியற்றுபவர்கள் ஆதரித்துள்ளனர். இளைஞர்கள் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கத்தின் புகைப்பிடித்தல் தடைச் சட்டத்திற்கு...

பெண்களின் அடிப்படைத் தேவைக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

பிரித்தானியப் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது என்று சமூகப் பேச்சு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரி பெண்களை கடுமையாக பாதிக்கும் என்றும் சமத்துவச்...

வாகனம் ஓட்டும்போது கோபப்படும் ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள்

ஏறக்குறைய 60 சதவீத ஆஸ்திரேலியர்கள் வாகனம் ஓட்டும்போது ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொள்வதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 1003 ஆஸ்திரேலியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 58.9 சதவீதம் பேர் சாலை...

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்பது குறித்து மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் ஒரு புதிய ஆய்வை நடத்தியது. குறிப்பாக, 75 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்பது குறித்து மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் ஒரு புதிய ஆய்வை நடத்தியது. குறிப்பாக, 75 வயதுக்கு மேற்பட்ட...

வங்கி அட்டை மோசடி காரணமாக கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் இழப்பு

கடந்த ஆண்டு மட்டும் வங்கி அட்டை மோசடியால் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் 10...