அடுத்த வாரம் சிட்னி வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏறக்குறைய 03 மணித்தியாலங்களுக்கு நடனம் மற்றும் பாடலை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.
சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மற்ற நகரங்களில் இருந்து இந்தியர்கள் தனித்தனி வாடகை விமானங்களை முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிட்னியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஜப்பானிய பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொள்ளாத காரணத்தினால் அதனை இரத்து செய்ய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி இந்த நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.