Sports அதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி - IPL 2023

அதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி – IPL 2023

-

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.

ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசென் பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 49பந்துகளில் சதம் அடித்தார், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

187 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர்.

ஐதராபாத் பந்துவீச்சை மொத்தமாக நொறுக்கினர். இதில் விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் சதம் அடித்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டு பிளசிஸ் 47 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் பிராஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.

இறுதியில் 4 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...