Cinemaகேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் - என்ன நடந்தது?

கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் – என்ன நடந்தது?

-

பிரான்ஸில் நடைபெற்று வரும் 76-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பெண் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்த பெண் உக்ரைன் தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்ததுடன், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை தலையில் ஊற்ற ஆரம்பித்தார்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து பாதுகாவலர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவின் இயக்குனர் தியரி ப்ரீமாக்ஸ், கடந்த வாரம் பேசும்போது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில், பிரெஞ்சு நடிகை கேத்தரின் டெனியூவ், உக்ரைன் கவிஞர் லெஸ்யா உக்ரைன்கா எழுதிய ஹோப் என்ற கவிதையை வாசித்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினர் அல்லது திரைப்பட நிறுவனங்களின் மீது கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு திரைப்பட விழாவிலும் அந்த தடை அமலில் உள்ளது என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...