News காதலியைக் கரம் பிடிக்கும் அமேசன் நிறுவனர் ஜெவ்

காதலியைக் கரம் பிடிக்கும் அமேசன் நிறுவனர் ஜெவ்

-

அமேசன் நிறுவனர் ஜெவ் பெசோஸ் (59) தனது காதலியான லோரன் சன்செஸ் (51) என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்கென்சி ஸ்கொட் என்பவரை ஜெவ் பெசோஸ் முதலில் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, லோரன் சன்செஸ் என்பவரை ஜெவ் பெசோஸ் 2018-ஆம் ஆண்டுமுதல் காதலித்து வந்துள்ளார்.

பத்திரிகையாளரான லோரன் சன்செஸ் உடனான காதலை, ஜெவ் 2019-ஆம் அண்டு வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல் மனைவியுடன் விவகாரத்து நடந்தது. இந்த இணையருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜெவ் பெசோஸ் தனது காதலியான லோரன் சன்செஸுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருந்தாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெவ் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். உலகின் முதற்தர பணக்காரர் என்ற அந்தஸ்தில் அவர் சில காலம் இருந்துள்ளார். அமேசன் நிறுவனம் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் திகதி நிறுவப்பட்டது. அமேசன் நிறுவனத்தை சாதாரண புத்தகக் கடையாகத் தொடங்கி, அதன்பின் படிப்படியாக வளர்த்து ஒன்லைன் வர்த்தகத்தில் உச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜெவ் பெசோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...