Sportsகுஜராத்தை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் -...

குஜராத்தை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணி, குஜராத்தை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ஓட்டங்களுடன் வெளியேறினார். ரகானே 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்தார்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 125 ஆக இருந்தது.

ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த அணி தலைவர் டோனி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதன்பின் ஜடேஜா 22 ஓட்டங்கள், மொயீன் அலி 9 ஓட்டங்கள் (நொட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை சேர்த்தது.

குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.

 இதில், சுப்மன் கில் அதிகபட்மாக 42 ஓட்டங்களை எடுத்தார். தொடர்ந்து, ஷனக்கா 17 ஓட்டங்களும், சாஹா 12 ஓட்டங்களும், விஜய் சங்கர் 14 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 8 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 4 ஓட்டங்களும், ராகுல் திவாடியா 3 ஓட்டங்களும் எடுத்தனர். 

ராஷித் கான் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நூர் அகமது 7 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19வது ஓவரில் 9 விக்கெட்டுகளுடன் குஜராத் அணி 146 ஓட்டங்களை எடுத்திருந்தது. இன்னும் 6 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.

 இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது.

 இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது

நன்றி தமிழன்

Latest news

பிளாஸ்டிக் குடிநீர் குழாய்களுக்காக பிரபல ஆஸ்திரேலிய உணவகத்திற்கு அபராதம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்காக ஆஸ்திரேலியாவின் பிரபலமான உணவகச் சங்கிலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Bubble tea மற்றும் பேக்கரி சங்கிலியான Top Tea-இற்கு $2,035 அபராதம்...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...