Sports100 ஓட்டங்களுக்குள் சுருண்டது லக்னோ - மும்பை வெற்றி - IPL...

100 ஓட்டங்களுக்குள் சுருண்டது லக்னோ – மும்பை வெற்றி – IPL 2023

-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஓவ் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

டொஸ் வென்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ஓட்டங்களிலும், இஷான் கிஷன் 15 ஓட்டங்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஒட்டங்களை உயர்த்தியது. 11வது ஓவரில் அணியின் ஓட்டங்கள் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் ஆட்டமிழந்தார்.

அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ஓட்டங்கள் விளாசினார். திலக் வர்மா 26 ஓட்டங்களிலும், டிம் டேவிட் 13 ஓட்டங்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ஓட்டங்களிலும், நேஹல் வதேரா 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை குவித்தது.

லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து, மயேர்ஸ் 18 ஓட்டங்களிலும், குருணல் பாண்டியா 8 ஓட்டங்களிலும், பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 ஓட்டங்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 2 ஓட்டங்களிலும், ஆயுஷ் பதோனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நிக்கோலஸ் பூரன் ஒரு ஓட்டம் கூட எடுக்கவில்லை. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டாய்னிஸ் 2 ஓட்டங்களுக்கு ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார்.

இதேபோல், தீபக் ஹூடாவும், கிருஷ்ணப்பா கௌதமும் சொர்ப ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆகினர். இது லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது. 15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது.

31 பந்துகளில் 83 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் லக்னோ தொடர்ந்து விளையாடியது. நவீன் உல் அக் மற்றும் மோஹ்சின் கான் களமிறங்கினர். இதில், நவீன் உல் அக் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். மோஹ்சின் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம், மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...

பெரும்பாலான வேலைகளை காப்பாற்றிய Cheap as Chips ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனைச் சங்கிலியான Cheap as Chips-இன் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Cheap as Chips சங்கிலி...

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...