மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள செவிலியர் சங்கங்கள் ஊதிய உயர்வுக்காக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
தற்போது மாநில அரசு வழங்கியுள்ள 3 சதவீத ஊதிய உயர்வு போதாது, எனவே 5 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள செவிலியர் சங்கங்களின் இத்தகைய வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் தொழில்துறை உறவுகள் ஆணையம் $350,000 அபராதம் விதித்தது.