பேர்த் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் மனநல பரிசோதனை அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த 15 வயது மாணவி நேற்று பெர்த் சிறுவர் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பத்தில் ஆஜராகிய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவனுக்கு எதிராக 07 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட உள்ளன.
அவனிடம் இருந்து 02 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய மாணவனால் 03 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.