News YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

-

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் யூடியூப் பயனர்கள் தாங்கள் என்ன வீடியோவை பதிவேற்றுகிறோம் என்பதை, முன்னோட்டமாக அறிவிப்பதாக ஸ்டோரீஸ் என்ற வசதி பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டிருக்கும், யூடியூபர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக வசதி அளிக்கப்பட்டு வந்தது.

இதில் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால், இந்த வசதியை யூடியூப் செயலியிலிருந்து ஜீன் 26ஆம் திகதி முதல், நீக்க போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஸ்டோரீஸ்களும், அடுத்த மாதம் 26ஆம் திகதியிலிருந்து 7 நாட்களுக்குள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஸ்டோரிஸ்களுக்கு பதிலாக, கம்யூனிட்டி போஸ்ட் அல்லது ரீல்ஸ் வழியாக, யூடியூபர்கள் தங்களது கதைகளை தெரிவிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டோரீஸ் வசதியை நீக்குவதன் மூலம் like Shorts, Community posts, live videos போன்றவற்றை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என்பதால், அந்த வசதிக்கு தடை விதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.