Newsசட்டவிரோதமாக பயணித்த 63 பேருக்கு நேர்ந்த கதி!

சட்டவிரோதமாக பயணித்த 63 பேருக்கு நேர்ந்த கதி!

-

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 63 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் centre régional opérationnel de surveillance et de sauvetage (Cross) மற்றும் Gris-Nez ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.

படகுகளில் ஒன்று அதன் இயந்திரத்தை கடலில் தொலைத்துவிட்டு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகவும், மேலும் சில மீன் பிடி படகுகளையும் அகதிகளை ஏற்றிச் சென்ற நிலையில் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மொத்தமாக 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...