Newsமோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்து அவர்களிடமே $5 லட்சம் இழந்த மூதாட்டி

மோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்து அவர்களிடமே $5 லட்சம் இழந்த மூதாட்டி

-

91 வயதான மூதாட்டி ஒருவர் மோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களிடமே 5 லட்சம் டொலர்களை இழந்த சோகக்கதை இது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கணவன் இன்றி வாழ்ந்துவந்த 91 வயது மார்கரெட்டிடம் வாழ்நாள் சேமிப்பாக 5 லட்சம் டொலர்கள் அவர் வசம் இருந்திருக்கிறது.

ஒரு நாள் இணையமோசடியில் ஈடுபடும் நபர் மார்கரெட்டைத் தொடர்புகொண்டு தனது பெயர் ஆண்ட்ரூ வில்லியம் என்றும், மோசடிக்கார்களைக் கண்டறிய ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையுடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரிபோல் வேடம் அணிந்த அந்நபர், மார்கரெட்டின் பணத்தை யாரோ திருட முயற்சிப்பதாகவும், அவர் தனது பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

ஒரு பாதுகாப்பான வங்கியில் பணத்தை வைக்குமாறும், இதன்மூலம் காவல்துறையினரால் இணையத்திருடர்களைக் கண்காணிக்க முடியும் எனவும் மார்கரெட்டிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ இதைச் சொல்ல வேண்டாம் என்றும் அது காவல்துறையினரின் இரகசிய நடவடிக்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் மார்கரெட்டை ஏமாற்றிய நபர் அவரை நம்பவைத்திருக்கிறார்

மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுவதாக நினைத்த மார்கரெட் சுமார் 10 மாத இடைவெளியில் தன்னிடமிருந்த கிட்டத்தட்ட அரை மில்லியன் டொலர்களை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறார்.

மார்கரெட் தனது புதிய கணக்கு ஒன்றில் இருந்து பணம் எடுக்க முயன்றபோது அது ஒரு மோசடி என்பதை உணர்ந்தார். தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தபோது அரை மில்லியன் டொலர்களை அவர் இழந்துவிட்டார்.

ஏனையோருக்கு விழிப்புணர்வூட்டும்வகையில் தனது இக்கதையை மார்கரெட் A Current Affair-இடம் பகிர்ந்திருந்தார்.

Latest news

ஜப்பானுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கு கடுமையாகும் விதிகள்

ஜப்பானின் குடிவரவு சேவை நிறுவனம் சர்வதேச மாணவர்களை சேர்க்க கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர்களுக்காக...

அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ள ஆஸ்திரேலியா

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியா அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ளது. அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியாவில் சராசரி தனிநபர் வரி விகிதம் 2022-2023...

சவால்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் பதவியை எவ்வாறு வகித்தார் என ஸ்காட் மோரிசன் தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், தான் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த காலத்தில் கவலைக்கு மருந்து உட்கொண்டதாக கூறுகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவது வெட்கப்பட...

விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறிய பிரபல பல்பொருள் அங்காடிக்கு $1.2 மில்லியன் அபராதம்

Woolworths பல்பொருள் அங்காடி சுமார் 1200 விக்டோரியன் தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறியதை ஒப்புக்கொண்டதால் $1.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சூப்பர்மார்க்கெட்...