நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசியல்வாதிகள் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு 02 வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதில்லை என மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான பிரேரணை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டால், வரும் ஜூலை 01ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் $260 மில்லியன் சேமிக்க எதிர்பார்க்கிறது.
இந்த நிதியை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக லிபரல் அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 03 வீத சம்பள அதிகரிப்பை தேர்தலை முன்னிட்டு குறைப்பது தொடர்பில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மூத்த அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்த சம்பளம் ஆண்டுக்கு $48 பில்லியன் ஆகும்.