Newsஇறுதி அஞ்சலியின் போது திடீரென விழித்தெழுந்த நபர்

இறுதி அஞ்சலியின் போது திடீரென விழித்தெழுந்த நபர்

-

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30 ஆம் திகதி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர்

உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர்.

அவருக்கு இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாலை போட்டு அஞ்சலி செலுத்தியபோது திடீரென அவர் கண்விழித்துள்ளார்.

இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.

உடனே மருத்துவருக்கு தகவல் வழங்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். அவர் வந்து மாலையும் கழுத்துமாக அசைவற்று கிடந்த ஜீது பிரஜாபதியை பரிசோதனை செய்துபார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த நபரை சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...