Newsபோலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்' புதிய வசதி

போலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்’ புதிய வசதி

-

பிரபல சமூக வலைதள நிறுவனமான, ‛ட்விட்டர்’ செயலியில், போலி செய்திகளை கண்டறிய, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ என்ற புதிய வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுதும், தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுது போக்கு செயலிகளில், அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக, ‛ட்விட்டர்’ உள்ளது.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.

இதை தடுக்க, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ எனும், புது அம்சத்தை அறிமுகப்படுத்த, ட்விட்டர் சோதனை செய்து வருகிறது.

இதன்படி, ட்விட்டரில் பதிவிடப்படும் ஒரு படத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள், அந்தப் படத்தைக் கொண்ட தற்போதைய மற்றும் எதிர்கால ட்விட்களில் தானாகவே காண்பிக்கப்படும்.

இதற்கேற்ப, ட்விட்டரில் பதிவிடப்படும் பதிவுகளுக்கேற்ப, ‛அபவுட் தி இமேஜ்’ எனும், விருப்ப பகுதியும் இடம்பெறும்.

இந்த விருப்பத்தை பயனர்கள், தேர்வு செய்தால், அவர்களால், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண முடியும்.

தற்போதைய நிலையில், ஒரே ஒரு படம் உள்ள ட்விட்டகளில் மட்டும், இம்முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வருங்காலத்தில், இதை முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...