ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்கிரீன் ரெக்கார்டிங் அப்ளிகேஷன் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த iRecorder என்ற அப்ளிகேஷன் டேட்டா மோசடியில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது 50,000க்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் முறையாக கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், இது வரை ஆபத்தானது அல்ல என அடையாளம் காணப்பட்டது.
இந்த செயலியை யாரேனும் தொடர்ந்து பயன்படுத்தினால், உடனடியாக அதை நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.