Newsநாய்க்கு வீடு கட்டி பரிசளித்த யூடியூபர்

நாய்க்கு வீடு கட்டி பரிசளித்த யூடியூபர்

-

அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு ரூ.16.5 இலட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியமாக இருக்கும் ப்ரெண்ட் ரிவேரா வளர்த்து வந்த பேக்கர் என்ற நாய் இறந்து போனது.

இதனால் வேதனையில் இருந்த அவர் அடுத்ததாக சார்லி என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார்.

இந்நிலையில் சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என கருதிய அவர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.

அதன்படி நாய் சார்லிக்கு ஒரு சொகுசு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டார். தனது வீட்டிற்கு அருகிலேயே நாய் சார்லிக்கும் வீட்டை கட்டினார்.

அந்த வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் தொலைகாட்சி, சோபா, மெத்தை, குளிரூட்டி, தலையணைகள் என அனைத்தும் உள்ளன.

வீட்டிற்கு வெளியே இது சார்லியின் வீடு என்ற பலகையும் வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news

மெல்போர்னின் Highpoint ஷாப்பிங் சென்டரில் மற்றொரு கத்திக்குத்து

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மைனர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள்...

சுற்றுலாப் பயணிகள் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியா இடம்பிடித்துள்ளது. CEOWORLD இதழ் இந்த நாடுகளுக்கு 2024 ஆம் ஆண்டையொட்டி பெயரிட்டுள்ளது. இங்கு விஜயம்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...

நியூ சவுத் வேல்ஸில் கோவிட் வழக்குகளை விட அதிகமாக உள்ள மற்றொரு நோய்!

நியூ சவுத் வேல்ஸில் RSV சுவாச வழக்குகள் COVID-19 மற்றும் காய்ச்சலை விட அதிகமாக உள்ளது, அது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுவாச நோயாளிகள் உள்ள...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...

அடிலெய்டில் உச்சத்தை எட்டியுள்ள வீடுகளின் விலை

அடிலெய்டின் சொத்து சந்தை ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது, இதன் சராசரி வீட்டின் விலை முதல் முறையாக ஒன்பது லட்சம் டாலர்களை (900,000) தாண்டியது. நகரின் வடக்குப்...