Newsசட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

-

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த விமானம், முன்பு ஆஸ்திரேலிய வான் படையில் இருந்த நிலையில், இனி இலங்கையின் எல்லைக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில், சட்டவிரோதமாக படகு வழியாக இலங்கையர்கள் புலம்பெயருவது தொடர்ந்து வரும் நிலையில், இவ்விமானம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விமானத்தை வழங்குவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீலின் கடிதத்தை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் ஒப்படைத்துள்ளார்.

இலங்கை கடற்படையின் அண்மைய கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த 43 சட்டவிரோத குடியேறிகள், ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், 2012 முதல் 2022ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயன்ற 1,314 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...

நியூயார்க் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் மேயர்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு விழாவில், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தின் உழைக்கும் மக்களுக்காக உழைப்பதாக அவர் உறுதியளித்தார். 34 வயதான...

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...