பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலம் இடிந்து விழும் தருணத்தை அப்பகுதி மக்கள் வீடியோவில் பதிவு செய்தனர். பாலம் இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் கட்டுவதற்கான செலவு சுமார் ரூ. ரூ.1,750 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி தமிழன்