Sports திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் - ரசிகர்கள் வாழ்த்து

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

-

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார்.

சென்னை அணியின் அணித்தலைவர் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராக திகழ்கிறார்.

ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.

7 ஆம் திகதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார்.

பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற்றது.

உட்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உட்கர்ஸ பவார் கிரிக்கெட் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.