5 வாரங்களில், அவுஸ்திரேலியா முழுவதிலும் பதிவாகியுள்ள காய்ச்சல் தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில், நோயாளிகளின் எண்ணிக்கை 32,000 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் நேற்றைய நிலவரப்படி இலங்கையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,000ஐ தாண்டியுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று சுகாதாரத் துறை தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
16 வயதுக்குட்பட்ட சுமார் 300 குழந்தைகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
காய்ச்சலின் அபாயத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், சரியான முறையில் தடுப்பூசி போடவும் சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.