News கின்னஸ் சாதனை படைத்த நாய்

கின்னஸ் சாதனை படைத்த நாய்

-

அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த நாய்க்கு 12.7 சென்றிமீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கு உள்ளது. கால்நடை மருத்துவர் ஒருவர் அந்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது. அதன் நாக்கு 9.49 சென்றிமீற்றர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது.

ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் தெரிவிக்கையில்,

ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது.

நாங்கள் ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். நாங்கள் அவர்களை முன்கூட்டியே எச்சரித்து பாதுகாப்பாக அழைத்து செல்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

NO முகாமின் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

பூர்வீக குரல் வாக்கெடுப்பு முன்மொழிவுக்கு எதிராக NO முகாமை ஆதரிக்கும் மக்கள் இன்று ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவிட் விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை

கோவிட் தொற்றுநோய் பருவம் தொடர்பான விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின்...

மெல்போர்ன் துறைமுகத்தில் கப்பலொன்றில் 200 கிலோவுக்கும் அதிகமான கோகோயின்

மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் 200 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 80...

குயின்ஸ்லாந்து சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் தடுப்பூசியை அடுத்த வாரத்திலிருந்து கட்டாயமாக்க வேண்டும்

குயின்ஸ்லாந்தில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய கோவிட் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் நீக்கப்பட்டுள்ளது. 2 வார கால...

பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் 72% ஆஸ்திரேலியர்கள்

பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் விமான நிலையம் மற்றும் தொடர்புடைய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சிட்னி வாசிகளுக்கு...

80% ஆஸ்திரேலியர்கள் வீட்டுக் கனவைக் கைவிட்டனர்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே தங்களுக்கென வீடு வாங்கும் திறன் இல்லாமல் போய்விட்டதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று கண்டறிந்துள்ளது.