Cinemaடைட்டானிக் நடிகர் இந்திய மாடல் அழகியுடன் காதலா?

டைட்டானிக் நடிகர் இந்திய மாடல் அழகியுடன் காதலா?

-

உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் நடித்து முன்னணி ஹாலிவுட் நடிகராக லியோனார்டோ டிகாப்ரியோ உயர்ந்தவர்.

இவருக்கு தற்பொது 48 வயது ஆகிறது. இந்த நிலையில் டிகாப்ரியோவும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாடல் அழகியான 28 வயது நீலம் கில்லும் காதலிப்பதாக இணையதளத்தில் தகவல் பரவியுள்ளது.

இருவரும் லண்டனில் உள்ள சில்டர்ன் பயர் ஹவுஸ் என்ற இடத்தில் ஜோடியாக உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது.

அப்போது டிகாப்ரியோவின் தாயார் இர்மெலின் இண்டன்பிர்கென் மற்றும் நண்பர்கள் சிலரும் உடன் இருந்துள்ளனர். இதை வைத்தே இருவரும் காதலிப்பதாக பேசுகிறார்கள்.

இது தவிர சமீபத்தில் கேன்ஸ் படவிழாவுக்கு தனது கில்லர்ஸ் ஆப் தி பிளவர்ஸ் படத்தை திரையிட டிகாப்ரியோ சென்று இருந்தார்.

அங்கும் டிகாப்ரியோவும், மாடல் அழகி நீலம் கில்லும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. நீலம் கில் 14 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தார்.

பல பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் ஹாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Qantas விமானம்

தெற்கு ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற Qantas விமானம் நேற்று இரவு பாதுகாப்புப் படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக அடிலெய்டு விமான நிலையத்தில் தரையிறங்குவதை...

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஊதா நிற தக்காளி

ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற "Purple Bliss" தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும். இது ஆஸ்திரேலியாவில்...

BBQ அடுப்பு வெடிப்பு – இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...