ஆஸ்திரேலியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 6.6 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட 947,000ஐ எட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 19,000 அதிகரிப்பு என புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இது கோவிட் பருவத்தின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 173,000 அதிகரிப்பு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஒவ்வொரு 15 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் 02 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒரே ஒரு தொழிலை வைத்து வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.