கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் மருத்துவ காப்பீட்டுப் பலன்கள் இன்னும் பெறப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சரியான வங்கி கணக்கு எண்கள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என சர்வீசஸ் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
எனவே பயனாளிகள் தங்களின் மருத்துவக் கணக்கை உடனடியாக அணுகி சரியான வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தாஸ்மேனியா மாநிலத்தில் மட்டும் இது போன்ற சிறு தவறுகளால் கிட்டத்தட்ட 20,000 பேருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மெடிகேர் கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு 03 வேலை நாட்களுக்குள் இழப்பீடு பெற முடியும் என்று Services Australia தெரிவிக்கிறது.