Sportsஇந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்

-

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 2-வது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 ஓவர்களை வீசி முடிக்காமல் இருந்தது. இதேபோல் அவுஸ்திரேலிய அணி 4 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கள நடுவர்கள் வழங்கிய அறிக்கையை அடுத்து ஐ.சி.சி. போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், அவுஸ்திரேலிய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதமாக விதித்தார்.

அத்துடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறிய குற்றத்துக்காக போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

2-வது இன்னிங்சில் சுப்மன் கில் 18 ஓட்டங்களில் ஸ்காட் போலன்ட் பந்து வீச்சில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கேமரூன் கிரீன் கையை தரையில் உரசியபடி பிடித்த இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் சரியானது தான் என்று அறிவித்த 3-வது நடுவரின் முடிவு குறித்து சமூக வலைதளத்தில் சுப்மன் கில் விமர்சனம் செய்ததால் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...