News Spider-Man போன்று உயரமான கட்டிடத்தில் ஏறிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Spider-Man போன்று உயரமான கட்டிடத்தில் ஏறிய இளைஞருக்கு நேர்ந்த கதி

-

தென் கொரியாவின் சியோல் நகரில் லோட்டே வேர்ல்ட் டவர் அமைந்துள்ளது. 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகுமாகும்.

இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென இளைஞன் ஒருவர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார்.

கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்ததை தொடர்ந்து பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

அந்த இளைஞன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரவழைத்தனர்.

பின்னர் அவர் பொலிஸாரால் அதிரடி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் எனவும் , பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.