NewsAI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

AI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

-

தொழில்நுட்ப உலகின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக ChatGPT தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாப்ட் என அடுத்தடுத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனம் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

AI தொழில்நுட்பம் பல தகவல்களை சேமித்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் பயனர்களுக்கு ஏற்றவாறு அதனை அமைத்து தரக்கூடியது.

ஊழியர்கள் சிலர் இணைந்துதான் ஒரு வெப்சைட் உருவாக்க இயலும் என்ற நிலைமாறி, நாம் AI தொழில்நுட்பம் வாயிலாக இதனை உருவாக்கிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அமைத்தாலும் பல வேலை நீக்கங்களும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி AI தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகுந்த தகவல்களை பரிமாறும்போது அவை வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும், AI வாங்கும் தகவல்களை அது நகலாக வெளியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் சாட்ஜிபிடி, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பல பில்லியன் கணக்கில் டாலர்களை AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊழியர்களை கூகுள் அறிவுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.

உலகில் எண்ணற்ற நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன. சாம்சங், அமேசான், டாட்சே வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை சில வரையறைகளுடன் பயன்படுத்தி வருகின்றன.

உலகெங்கிலும் 43 சதவீத பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தில் சாட்ஜிபிடி மற்றும் இதர ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...