Newsசவுதியில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி சொகுசு கட்டிடம்

சவுதியில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி சொகுசு கட்டிடம்

-

சவுதி அரேபியாவின் ஹெக்ராவில் புகழ்பெற்ற பாறைகளில் செதுக்கப்பட்ட கட்டிடக்கலை தளம் உள்ளது. அதனருகில் பாலைவனம் ஒன்றுள்ளது.

அதில் மராயா என்ற பெயரில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘மராயா’ என்ற சொல்லுக்கு ‘எதிரொளிப்பு’ எனப் பொருள்.

இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் இந்த நவீன கண்ணாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பாலைவனத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கண்ணாடி கட்டிடம் அமைப்பது சாதாரணமான காரியம் இல்லை. ஏனெனில் கண்ணாடியின் எதிரொளிப்பால் வீட்டின் உள்ளே வெப்பம் அதிகமாகும்.

மராயா கண்ணாடி கட்டிடத்தின் மேற்கூரை பாலைவனத்தின் காட்சிகளை பார்த்து இரசிக்கும்படி அமைந்துள்ளது. மராயாவில் நட்சத்திர உணவகம், இசை நிகழ்ச்சிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

மராயாவுக்கு வரும் பார்வையாளர்கள் இளஞ்சிவப்பு சூரிய அஸ்தமன ஒளி முதல் மின்னும் விடியல் வரை அனைத்தையும் பார்த்து இரசிக்கின்றனர்.

அது நாளின் ஒவ்வொரு மணித்துளிகளையும் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக மாற்றுகிறது. சில பார்வையாளர்கள் கட்டிடத்தின் உள்ளே செல்ல தயங்குகிறார்கள்.

எனவே அவர்கள் வெறுமனே மராயாவுடன் புகைப்படங்கள் மட்டும் எடுத்து கொள்கின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் சாதனை அளவை எட்டியுள்ள Influenza வழக்குகள்

சமீபத்திய தேசிய சுகாதார தரவுகளின்படி, குளிர்காலக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 431 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய சுவாச கண்காணிப்பு...

பாசி பரவல் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஒரு கோரிக்கை

நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து...

வெளிநாடொன்றில் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய...

காணாமல் போன குழந்தைகள் பெண்களுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல்

கோல்ட் கோஸ்டில் இருந்து காணாமல் போன மூன்று குழந்தைகளும் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் ஒரு பெண்ணுடன் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். நேற்று காலை சுமார் 8.50...