Newsபாகிஸ்தான் சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தான் சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்

-

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கைதிகள் பலர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

ஆனால் கைதிகள் சிலர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தப்பிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி தொழுகை நடைபெற்ற சமயத்தில் சில கைதிகள் சிறையில் இருந்து ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

இதனையறிந்த சிறை காவலர்கள் அவர்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் சிறை காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

மேலும் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். அவர்கள் தப்பி செல்வதற்கு வெளியில் இருந்து சிலர் உதவி உள்ளனர்.

தப்பி ஓடிய கைதிகளில் சிலர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமன் சிறைச்சாலையானது ஈரான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது.

எனவே நண்பர்களின் உதவியுடன் இவர்கள் அங்கு தப்பி ஓடி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்காக சிறையில் இருந்து தப்பிய கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்படும் பிரபலமான பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் உள்ள சிறந்த பெயர்களை ஆராய்ச்சி நிறுவனமான McCrindle-இல் பகுப்பாய்வு...

பார்கின்சன் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழு ஒன்று பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் மேலும் மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பார்கின்சன்...

விக்டோரியன் நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இரட்டிப்பு தண்டனை

விக்டோரியன் மேல்முறையீட்டு நீதிமன்றம், விக்டோரியன் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு LH Holding Management ஊழியர் ஒருவர் Forklift வாகனத்தில் சிக்கி...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...

வேலை அழுத்தம் காரணமாக கோகைன் பயன்படுத்திய ஆஸ்திரேலிய அரசியல்வாதி

வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்க கோகைனைப் பயன்படுத்திய ஒரு அரசியல்வாதி பற்றிய செய்திகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ளன. முன்னாள் மாநில லிபரல் தலைவரான 40 வயதான டேவிட் ஸ்பியர்ஸ்,...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...