Cinemaஒஸ்கருக்கு செல்லும் நடிகர் விக்ரமின் படம்

ஒஸ்கருக்கு செல்லும் நடிகர் விக்ரமின் படம்

-

விக்ரம் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்காக உடலை வருத்தி தோற்றத்தை மாற்றி நடித்து வருகிறார்.

முந்தைய பிதாமகன்,அந்நியன், கந்தசாமி, பீமா, தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு சாட்சிகளாக உள்ளன.

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் படமும் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் மோதலையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

இதில் விக்ரம் நீண்ட தாடி, தலைமுடியுடன் பண்டைய கால காட்டுவாசி போன்று வித்தியாசமாக நடிக்கும் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதற்காக பலமணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார்.

தங்கலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடப்பதாகவும் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும் தங்கலான் படத்தை ஒஸ்கருக்கு அனுப்ப முடிவு செய்து இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...