Newsகடல் திடீரென உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி சேதம்

கடல் திடீரென உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி சேதம்

-

தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று காலை முதல் இராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வரும் நிலையில் பாம்பன் வடக்கு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் திடீரென சுமார் 200 மீற்றர் உள் வாங்கியுள்ளதால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், வடக்கு லைட் ஹவுஸ் (வெளிச்சவீடு) கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 200 மீற்றருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. மேலும் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரை தட்டியுள்ளன.

இதனால் மீன் பிடிக்க செல்லும் நாட்டு படகு மீனவர்கள் கடலில் நடந்து சென்று படகுகளை கடலுக்குள் இழுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தியுள்ளனர்.

கடல் உள்வாங்கும் நேரங்களில் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் மீன்பிடி படகுகளை கடல் நீர் பெருக்கெடுக்கும் வரை மீனவர்கள் காத்திருந்து படகுகளை மீட்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் மீன் பிடி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பாம்பன் வடக்கு மீன் பிடி துறைமுக பகுதியில் தூண்டில் வளைவுகளுடன் கூடிய துறைமுகம் அமைத்து தந்தால் கடல் உள் வாங்கும் நேரங்களில் மீன் பிடி தொழில் பாதிக்காமல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என அப்பகுதி நாட்டு படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...