சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரி இல்லாமல் விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த இந்த கோரிக்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இளம் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 6 ஆம் திகதி சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு எதிராக 04 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பின்னர் 3 குற்றச்சாட்டுகள் விசாரணை அதிகாரிகளால் வாபஸ் பெறப்பட்டன.
இருப்பினும், கட்டாய உடலுறவு குற்றச்சாட்டிற்கு எதிராக அவர் மீது வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.





