Articleஅடிக்கடி சூடாகிறதா உங்கள் மொபைல்? - தவிர்க்க புதிய வழிகள் இதோ!

அடிக்கடி சூடாகிறதா உங்கள் மொபைல்? – தவிர்க்க புதிய வழிகள் இதோ!

-

உலகின் முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒரு சில போன்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தான் வெளிவருகின்றன. ஆனாலும் சில சமயங்களில் போன் சூடாவது போன்ற சில சிக்கல்கள் வரும்.

அதாவது ஸ்மார்ட்போன் சூடானால் அது போனின் செயல்பாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். பின்பு போனை பயன்படுத்துவதற்கே சிரமமாக இருக்கும். முக்கியமான ஸ்மார்ட்போன் சூடானால் பற்றரியின் ஆயுட்காலம் நிரந்தரமாகக் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகள் தான் நமது ஸ்மார்ட்போனை அதிக சூடாக்குகிறது.

குறிப்பாக ஐபோன் அல்லது எண்ட்ரொய்ட் போன் எந்த வகை போன் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை அனைவருக்கும் பொதுவாக காணப்படும். எனவே முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் ஏன் சூடாகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு நாம் செய்யக்கூடிய தவறுகளை எப்படி தவிர்க்கலாம் என்பதைச் சற்று விரிவாகப் இப்போது பார்க்கலாம்.

சூரிய ஒளி:

ஸமார்ட்போன் வெப்பமடைவதற்கான பொதுவான காரணம் என்னவென்றால், சூரிய ஒளி நேரடியாக ஸ்மார்ட்போனில் படும்படி வைப்பது தான். குறிப்பாக உங்களது போனை சிறிது நேரம் வெயிலில் வைத்தால் கூட போனின் பேட்டரி மற்றும் செயல்திறன் போன்றவற்றில் அதிக பாதிப்புகள் வரும் எனவே சூரிய ஒளி இல்லாத இடத்தில் போனை வைப்பது மிகவும் நல்லது.

ரெம்:

உங்களது போனின் ரெம் (RAM)-இல் அதிக இடத்தை பிடிக்கும் வகையிலான செயலிகளையோ அல்லது கேம்ஸ்களையோ வைத்திருந்தால் கூட போன் வெப்பமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ரெம் அளவைப் பொறுத்து குறைந்த செயலிகளை போன்களில் பயன்படுத்துவது நல்லது. அதிலும் லைட் வெர்ஷன் செயலிகளை போன்களில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

அப்டேட் முக்கியம்:

ஸ்மார்ட்போனை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக உங்களது போனை முதல் முறை அப்டேட் செய்யும் போது கொஞ்சம் சூடாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் போனை அப்டேட் செய்தால் சிறந்த செயல்திறன் கிடைக்கும். பின்பு போனில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறையும்.

வைரஸ் தாக்குதல்:

அதிக தரத்தில் உள்ள வீடியோக்களை நீண்ட நேரம் பார்த்தாலும் உங்களது போன் சூடாக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். பின்பு போனில் வைரஸ் தாக்குதல் அல்லது போலியான செயலிகள் இருந்தால் செயல்திறன் பாதித்து சூடாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை:

பொதுவாக ஸ்மார்ட்போனின் வெப்பநிலை 0 முதல் 35 பாகை செல்சியஸ் அளவிற்குள் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்கு மேல் உங்களது போன் சூடானால் அதை உடனே சரி செய்யுங்கள். அதேபோல் உங்கள் போன் அடிக்கடி சூடாகும் என்றால், வெயில் காலத்தில் போனில் உள்ள சில அம்சங்களை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதாவது ஜிபிஎஸ், மெப், ட்ராக்கிங் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பேக் கவர்:

உங்களது ஸ்மார்ட்போனுக்கு பேக் கவர் பயன்படுத்தினால், சிறிது நேரத்திற்கு அதை அகற்றுவது நல்லது. அதாவது இதன் மூலம் உங்களது போன் சூடாவது கொஞ்சம் குறையும். அதேபோல் போன் பயன்படுத்தாத நேரத்தில் சில செயலிகள் பேக்ரவுண்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதனால் கூட நமது போன் சூடாக வாய்ப்பு உள்ளது. மேலும் போனில் பேட்டரி சேவ் மோடை எக்டிவேட் செய்து பயன்படுத்துவது நல்லது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...