அவுஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே வேலை பார்த்து, 120,000 டொலர் சம்பாதிக்கும் பெண் ஒருவர், சக ஊழியர்களால் உலகின் அழகான லொறி சாரதி என கொண்டாடப்படுகிறார்.
பகுதி நேர லொறி சாரதியாக பணியாற்றும் பெர்த் பகுதியை சேர்ந்த ஆஷ்லியா என்ற பெண்மணி, ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே லொறிகளுடன் காணப்படுகிறார். மட்டுமின்றி 120,000 டொலர் வரையில் வருவாய் ஈட்டுகிறார். இதனால் தமக்கு வேலை இல்லாத நாட்களில் தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றே அவர் கூறுகிறார்.
Pilbara சுரங்கத்தில் பணியாற்றும் அவர் தொடர்ந்து 14 நாட்கள் பணியாற்றுவதுடன், அடுத்த 14 நாட்கள் ஓய்வெடுத்துக்கொள்கிறார். தினசரி விடிகாலை 4 மணிக்கு தொடங்கி, கொளுத்தும் வெயிலில் 12 மணி நேரம் பணியாற்றுகிறார்.
கடினமான பணி என்றாலும், 6 மாதங்கள் பணியாற்றும் அவர் சுமார் 120,000 டொலர் வருவாயாக ஈட்டுகிறார். அத்துடன், தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சமூக ஊடக பக்கங்களிலும் அவர் கவனத்தை ஈர்த்து வருகிறார்.