News வெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

வெறும் புகைப்படம் எடுத்ததற்காக 1400 நாட்கள் சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டவர்!

-

சீனாவின் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்த நிலையில், உளவு பார்த்ததாக கூறி தைவான் தொழிலதிபர் ஒருவர் அனுபவித்த கொடூர சித்திரவதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2019ல் ஷென்சென் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்ததாக கூறி தைவான் தொழிலதிபரான லீ மெங்-சு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது உளவு பார்த்தல் மற்றும் அரச இரகசியங்களை திருடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர், ஓராண்டு மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2021 ஜூலை மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, சீனாவில் இருந்து வெளியேற அதிகாரிகள் தரப்பு அவரை அனுமதிக்கவில்லை.

குற்றம் செய்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்றால், இனி சீனாவுக்கு நுழைய முடியாதபடி தடை செய்து விட்டு, வெளியேற்றுவார்கள். ஆனால் லீ மெங்-சு தைவான் நாட்டவர் என்பதால் சீன அதிகாரிகள் அரசியல் கோணத்தில் இந்த வழக்கை அணுகியுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

Latest news

கூர்மையான ஆயுதங்கள் சட்டங்கள் கடுமையாக்கும் NSW

கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

கிழக்கு விக்டோரியாவில் பல பகுதிகளுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரியாகோலாங், குல்லோடன், மூர்னபா, ஸ்டாக்டேல் ஆகிய பகுதிகளில் 04...

செப்டம்பர் மாதத்தில் வீடு மற்றும் சொத்துகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

செப்டம்பர் மாதத்திலும் இந்த நாட்டில் வீடு மற்றும் சொத்து விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு...

குழந்தை பராமரிப்புக் கட்டணத்தை குறைக்கத் தவறியது குறித்த அறிக்கை

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை குறைக்க தொழிலாளர் அரசாங்கம் பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவுஸ்திரேலிய குடும்பங்களின்...