News சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

-

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.

செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தமிழரும், முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். இதற்காக அவர் முறைப்படி பிரச்சாரத்தை தொடங்கினார். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக தர்மன் தன் விருப்பத்தை முதலில் அறிவித்து, ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அதிகாரப்பூர்வ வெளியீடு வந்தது.

கனகரத்தினம் சண்முகரத்தினத்தின் மகனான தர்மன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் அரசு ஊழியராக இருந்தார்.

2001ஆம் ஆண்டில் அரசியலில் களமிறங்கிய தர்மன், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த அமைச்சராகவும், கல்வித்துறைக்கான மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2003ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட தர்மன் 2008ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2011ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக தனது இலாகாவைத் தக்க வைத்துக் கொண்ட தர்மன், பின்னர் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2012க்கு இடையில் மனிதவள அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 9 ஆண்டுகளுக்கு பின் 2015யில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தான் தர்மன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,

‘சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில விதிமுறைகள் மாற்று நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று நான் மிகவும் வலுவாக உணர்ந்ததால், இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அலுவலகத்திற்கான தன் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது ‘ஒரு புதிய சகாப்தத்திற்கான ஜனாதிபதியாக’ இருக்க விரும்புவதாக தர்மன் குறிப்பிட்டார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.