பயனர்களுக்கு விளம்பர தொகையில் பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டத்தை ட்விட்டர் நிறுவனம் அமுல்படுத்தியுள்ளது.
இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் தங்களுடைய ட்வீட்-க்கு பணம் பெற தொடங்கியுள்ளனர்.
ட்விட்டர் பயனர்கள் தங்களது ட்வீட்களுக்கு வருவாய் ஈட்டும் புதிய திட்டம் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அந்த வகையில் தற்போது ட்விட்டர் பயனர்கள் வருமானம் ஈட்டி கொள்ளும் புதிய வருவாய் திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய பயனர்கள் யாரும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.