Newsஅவுஸ்திரேலியாவில் காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண்

அவுஸ்திரேலியாவில் காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண்

-

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்துள்ளார்.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த 69 வயதான ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகள் அவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்துள்ளதால், நீதிமன்றம் அவரை பரோலில் செல்ல அனுமதித்துள்ளது.

ஜூடித் ஆன் வென் தமது கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்துள்ளார். இதனால் தூக்கமின்மை, தனிமைப்படுத்தப்பட்டு அவநம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார்.

அத்துடன், கணவரை கவனிக்க மறுத்துள்ளார். இதனால் 18 மாதங்களில் அவருக்கிருந்த உளவியல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 20,000 டொலர் செலவிட்டு, படகு ஒன்றை லான்ஸ் வென் வாங்க, அது குடும்பத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தே, தமது கணவர் பயன்படுத்திவந்த மாத்திரைகளில் 50 எண்ணிக்கையை சூப்பில் கலந்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த லான்ஸ் வென் கை நரம்பையும் ஜூடித் ஆன் வெட்டி விட, இறுதியில் உடற்கூறு ஆய்வில், மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதே மரண காரணம் என உறுதி செய்யப்பட்டது.

Latest news

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற மிக வயதான நபர்

45 வயதான Venus Williams, Wildcard நுழைவு பெற்ற பிறகு ஆஸ்திரேலிய ஓபனுக்கு மீண்டும் திரும்ப முடிந்தது. இந்த வாய்ப்பின் காரணமாக, பிரதான சுற்றில் பங்கேற்ற மிக...